Monday 11 February 2019

சிகரம் பாரதி | 11.02.2019

வணக்கம் வலைத்தள நண்பர்களே! 

புதிய ஆங்கிலப் புத்தாண்டு பிறந்துவிட்டது. எல்லோரும் கொண்டாடித் தீர்த்தாயிற்று. இப்போது அவரவர் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். எல்லா நாட்களைப் போலவும் ஒரு நாளாக ஆங்கிலப் புத்தாண்டு தினம் நம்மைக் கடந்து சென்றுவிட்டது. 




புதிய வருடத்திலும் ஒரு மாதம் முடிந்துவிட்ட நிலையில் இருக்கிறோம். இப்போது தானே வருடம் ஆரம்பித்திருக்கிறது என்று பெருமூச்சு விடுவதற்குள் அடுத்த வருடம் வந்துவிடும். 

ஒவ்வொருவரும் இந்த வருடத்தில் இன்னின்ன காரியங்களைச் செய்ய வேண்டும் என எண்ணிக் கொள்வதுண்டு. என் மனதிலும் பல திட்டங்கள் இருக்கின்றன. 

நான் மிக விரும்பும் ஊடகத் துறையில் கால்பதித்து இந்த பெப்ரவரி மாதத்துடன் வெற்றிகரமாக மூன்று மாதங்களைக் கடந்துவிட்டேன். எத்தனை சோதனைகள் வந்தாலும் அவற்றைத் தாண்டி குறைந்தது இரண்டு வருடமாவது இந்தத் துறையில் நிலைத்துவிட வேண்டும். அந்த இரண்டு வருடத்துக்குள் இந்த ஊடகத் துறையில் என்னென்ன கற்றுக்கொள்ள முடியுமோ அத்தனையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது முதல் திட்டம். 

நான் பாவித்த மடிக் கணினியின் திரையில் நிறம் மங்கி விட்டது. அத்துடன் மின்கலமும் (Battery) பழுதடைந்து விட்டது. அவற்றை சரி செய்து மீண்டும் பழைய படி எனது மடிக் கணினியை இயங்க வைக்க வேண்டும். அல்லது புதிதாக நான் எதிர்பார்க்கும் எல்லா அம்சங்களும் உள்ளடக்கிய மடிக் கணினி ஒன்றை வாங்கிவிட வேண்டும் என்பது அடுத்த திட்டம். 

ஊடகத் துறைக்கு அவசியமான Journalism, Adobe InDesign, Adobe Photoshop, Graphic Designing, Marketing, Printing, Supply or Delivery என எல்லாவற்றையும் கிடைக்கும் வாய்ப்பிற்கேற்ப படிப்படியாகக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது மற்றுமோர் திட்டம். இதனை ஓரளவுக்கு செயல்படுத்திக் கொண்டு வருகிறேன். முறையாக கற்கை நெறிகள் எதனையும் கற்றுக்கொள்ள ஆரம்பிக்கவில்லை என்றாலும் இவற்றில் அவ்வப்போது எழும் சந்தேகங்களை அத்துறை சார்ந்தவர்களிடம் கேட்டறிந்து பயிற்சி செய்து கொள்கிறேன். 

தனிப்பட்ட வாழ்க்கை சார்ந்தும் பல திட்டங்கள் இருக்கின்றன. அதற்கான வாய்ப்பு அமையும் போது அவற்றையும் பகிர்ந்து கொள்கிறேன். இது போல உங்களிடமும் பல திட்டங்கள் இருக்கலாம். அவற்றையும் பகிர்ந்து கொள்ளுங்கள். 

சந்திப்போம் நண்பரகளே! 

உங்கள், 
சிகரம் பாரதி. 

2 comments :

  1. நானெனக்கு வேண்டப்பட்டவர்க ளிடம் கூறுவது ---------------
    திட்டமிட்டுச் செய் திட்டமிட்டதைச் செய்

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாக. மிகவும் பயனுள்ள அறிவுரை. தங்களைப் போன்ற சான்றோரின் வழிகாட்டல் இருந்தால் எமக்கு தினமும் வெற்றிதான்.

      Delete

Ads

My Blog List